தேசிய செய்திகள்

ஊழல் புகாரில் சிக்கிய 79 மத்திய அரசு ஊழியர்கள் - வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பு + "||" + 79 federal civil servants caught in a corruption scandal - Stretching without permission to proceed

ஊழல் புகாரில் சிக்கிய 79 மத்திய அரசு ஊழியர்கள் - வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பு

ஊழல் புகாரில் சிக்கிய 79 மத்திய அரசு ஊழியர்கள் - வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பு
ஊழல் புகாரில் சிக்கிய 79 மத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன.
புதுடெல்லி,

ஊழல் புகாரில் சிக்கிய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட மத்திய அரசு ஊழியர்கள் 79 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் காத்திருக்கிறது. ஆனால், 4 மாதங்களுக்கு மேல் ஆகியும், சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன.


இந்த ஊழியர்கள் மீது மொத்தம் 41 வழக்குகள் தொடரப்பட உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 9 வழக்குகள், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

உத்தரபிரதேச அரசின் அனுமதிக்காக 8 வழக்குகளும், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி ஆகியவற்றின் அனுமதிக்காக 4 வழக்குகளும், யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதிக்காக 3 வழக்குகளும் காத்திருக்கின்றன.

வழக்கு தொடர விரைந்து அனுமதி வழங்குமாறு நினைவுபடுத்தி இருப்பதாக ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.