தேசிய செய்திகள்

பாலகோட் தாக்குதல் முடிவு: ரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல் + "||" + Balagot Attack Result: If Rafael flights Which is still in our favor - Air Force Commander Information

பாலகோட் தாக்குதல் முடிவு: ரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்

பாலகோட் தாக்குதல் முடிவு: ரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்
பாலகோட் தாக்குதலின்போது ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும் என்று விமானப்படை தளபதி தனோவா கூறினார்.
புதுடெல்லி,

காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை வான் தாக்குதல் நடத்தியது.


இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை சார்பில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ‘2040-ல் விண்வெளி சக்தி; தொழில்நுட்பத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலகோட் தாக்குதலில் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் மூலம் மிகச்சரியாக இலக்கு தாக்கப்பட்டது. மிக்-21, பைசன்ஸ் மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்களை நாம் மேம்படுத்துவதன் மூலம் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

நாம் உரிய நேரத்தில் ரபேல் போர் விமானங்களை நமது படையில் இணைத்திருந்தால் இந்த முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ரபேல் மற்றும் தரையில் இருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை எஸ்-400 ஆகியவற்றை நமது படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மேலும் நமக்கு சாதகமாக மாறும். இது 2002-ம் ஆண்டு நடைபெற்ற பராகராம் சம்பவத்தின்போது நடைபெற்றதைப்போல இருக்கும்.

நமது ராணுவத்தின் அனைத்து படைகளையும் விட நம்மை தான் தொழில்நுட்பம் மிகவும் பாதிக்கிறது. தரையில் உள்ள படைகள் குறிப்பாக வீரர்களுடன் போரிடும்போது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கருவிகளை இயக்குகிறார்கள். ஆனால் போர் விமானத்தில் இது மிகச்சிறிய கருவிகளாக இருக்கும்.

மோசமான வெப்பநிலை மற்றும் காற்றழுத்த நிலைமை ஆகியவற்றையும் பொருத்ததாக இது இருக்கும். தொழில்நுட்ப மாற்றத்திலும் விமானப்படையின் சக்தி மிகவும் பிரச்சினைக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதுபோல, கடந்த ஆண்டு ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஏவுகணை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் போர் விமானம், ஏவுகணை, ஏன் ஆளில்லா குட்டி விமானங்களையும் (டிரோன்) அழிக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பாலகோட் தாக்குதல்: சம்பவ இடத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற பாகிஸ்தான்
பாலகோட் தாக்குதல் நடைபெற்று 43 நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர்களை பாகிஸ்தான் அழைத்து சென்று உள்ளது.
2. பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் - தெலுங்குதேசம் சொல்கிறது
பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு, புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
3. பாலகோட் தாக்குதல்: பிரதமர் மோடியை பாராட்டுவதில் என்ன தவறு? - ராஜ்நாத் சிங் கேள்வி
பாலகோட் தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடியை பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது என ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.
4. 80 சதவீதம் துல்லிய தாக்குதல் : 12 சேட்டிலைட் புகைப்படங்கள் அரசிடம் ஒப்படைப்பு - விமானப்படை
80 சதவீதம் துல்லிய தாக்குதல் நடந்துள்ளது. 12 சேட்டிலைட் புகைப்படங்கள் அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளதாக விமானப்படை தகவல் வெளியிட்டு உள்ளது.
5. பாலகோட் தாக்குதல் ரகசியம் - நடந்தது என்ன? வெளிநாட்டு நிருபர்கள் சொல்வது என்ன?
பாலகோட் தாக்குதலில் நடந்த ரகசியம் என்ன? எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து வெளிநாட்டு ஊடகங்களின் நிருபர்கள் கூறி உள்ளனர்.