தேசிய செய்திகள்

‘திரவுபதியை உங்கள் கண்முன் துகிலுரித்துள்ளனர்’ - முலாயம்சிங் யாதவுக்கு தகவல் அனுப்பிய சுஷ்மா சுவராஜ் + "||" + "Draupadi Of Rampur Being Disrobed" - Sushma Swaraj who informed Mulayam Singh Yadav

‘திரவுபதியை உங்கள் கண்முன் துகிலுரித்துள்ளனர்’ - முலாயம்சிங் யாதவுக்கு தகவல் அனுப்பிய சுஷ்மா சுவராஜ்

‘திரவுபதியை உங்கள் கண்முன் துகிலுரித்துள்ளனர்’ - முலாயம்சிங் யாதவுக்கு தகவல் அனுப்பிய சுஷ்மா சுவராஜ்
ஜெயப்பிரதாவை விமர்சித்த அசம்கான் தொடர்பாக, முலாயம்சிங் யாதவுக்கு சுஷ்மா சுவராஜ் தகவல் அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் 2 முறை சமாஜ்வாடி எம்.பி.யாக இருந்த நடிகை ஜெயப்பிரதா கடந்த மாதம் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் ராம்பூர் தொகுதியில் மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஜெயப்பிரதாவை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம்கான் பேசும்போது, 10 வருடம் இங்கு பிரதிநிதியாக இருந்தவரை புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு 17 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனால் எனக்கு 17 நாட்களில் அவர் அணிந்துள்ள உள்ளாடை காக்கி நிறம் என்பது தெரிந்துவிட்டது என்றார்.


அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி மகாபாரத சம்பவத்தை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமூக வலைத்தளத்தில், “முலாயம் சிங் அவர்களே, சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான உங்கள் கண் முன்னே ராம்பூரின் திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்மர் அமைதியாக இருந்ததைப்போன்ற தவறை நீங்களும் செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார். இந்த தகவலை அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன் ஆகியோருக்கும் இணைத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் எம்.பி.
பிரதமர் மோடி பற்றி விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்.பி., அதற்கு கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்டார்.
2. பதற்றம், விறுவிறுப்பாக செல்லும் "செவன்" - விமர்சனம்
நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்.
3. ராஜீவ் காந்தி குறித்து விமர்சனம்: பிரதமர் மோடி மீது டெல்லி போலீசில் புகார்
ராஜீவ் காந்தி குறித்து விமர்சனம் செய்த, பிரதமர் மோடியின் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4. சுயசரிதை புத்தகத்தில் விமர்சித்த அப்ரிடிக்கு கம்பீர் பதிலடி
சுயசரிதை புத்தகத்தில் விமர்சித்த அப்ரிடிக்கு, கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
5. பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் - தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரினார்
பா.ஜனதா தலைமையை விமர்சித்து முரளி மனோகர் ஜோஷி பெயரில் பரவும் கடிதம் தொடர்பாக, அவர் தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரியுள்ளார்.