தேர்தல் செய்திகள்

துணிச்சலுடன் களத்தில் நிற்கும் அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் + "||" + SUPPORT AMMK TTV Dhinakaran request

துணிச்சலுடன் களத்தில் நிற்கும் அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்

துணிச்சலுடன் களத்தில் நிற்கும் அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்
களத்தில் துணிச்சலுடன் நிற்கும் அ.ம.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களைப் பற்றி கவலைப்படாமல், மாநில நலன்களைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் லாபங்களுக்காக சுயநலக் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வையும், மக்களை மத ரீதியாகத் துண்டாடி, அதன் மூலம் வெறுப்பை விதைத்து ஆபத்து அரசியல் நடத்தும் மதவாத பா.ஜ.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதேபோல் பா.ஜ.க.வுடன் ரகசிய உறவைப் பேணிவரும் இரட்டை வேட தி.மு.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் விரோத ஆட்சி ஒழிவது மட்டுமல்ல., சுயநல, சந்தர்ப்பவாத, இரட்டை வேட அரசியலும், கூட்டணி என்ற பெயரில் நடக்கும் அருவெறுக்கத்தக்க பேர அரசியலும் ஒழிக்கப்படும்.


இப்படி ஒட்டுமொத்த அவலத்தையும், அசிங்கத்தையும் அப்புறப்படுத்தும் கடமையும், வாய்ப்பும், அதிகாரமும் மக்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எத்தனை சோதனை வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், மக்களுக்காக களத்தில் துணிச்சலுடன் நிற்கும் அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் இழந்த பெருமைகளையும், உரிமைகளையும் மீட்டெடுக்கவும்; தமிழகம், புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார தன்னிறைவு பெற்று பாதுகாப்பான, கவுரவமான வாழ்க்கை வாழவும்; தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லவும்; அடிமையாக இருக்கும் தமிழகம் தலை நிமிரவும், அதன் மூலம் தமிழர் வாழ்வு மலரவும் ‘பரிசுப் பெட்டகம்’ சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி வாழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.