தேர்தல் செய்திகள்

மத்திய சென்னையில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தெகலான்பாகவி தீவிர பிரசாரம் + "||" + Central Chennai AMMK Compete in the coalition SDPI Party candidate Thegalan Baqaviis a serious campaign

மத்திய சென்னையில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தெகலான்பாகவி தீவிர பிரசாரம்

மத்திய சென்னையில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தெகலான்பாகவி தீவிர பிரசாரம்
மத்திய சென்னை தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் தெகலான்பாகவி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை,

அ.ம.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் தெகலான்பாகவி போட்டியிடுகிறார். பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்குகள் கேட்டு, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சோலை அம்மன் கோவில் தெரு, முத்தம்மன் கோவில் தெரு, செட்டி தெரு, பட்டாச்சரி தெரு, வடக்கு மாடவீதி, தாகூர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட இப்ராகீம் சாகிப் 2-வது தெரு, சுல்தான் தெரு, மரைக்கா லெப்பை தெரு, மூர்தெரு, ஜோன்ஸ் தெரு, அங்கப்ப நாயக்கன் தெரு உள்பட அனைத்து பகுதிகளிலும் அ.ம.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர்களுடன் ஆட்டோவில் வீதி வீதியாக சென்று நேற்று தெகலான்பாகவி வாக்கு சேகரித்தார்.

சென்னை மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கூடிய பணிகளை செய்ய வேண்டிய பதவி ஆகும். இந்த பகுதியில் தினமும் கடந்து செல்பவன் நான். இங்கு தண்ணீர் பிரச்சினை, சாக்கடை வசதி இல்லாதது எனக்கு நன்கு தெரியும். இது தயாநிதி மாறனுக்கு தெரியாது. 5 ஆண்டுக்கு ஒருமுறை வாக்கு கேட்டு கார்களில் அவர் வலம் வருவார்.

உங்களுடைய பிரச்சினைகளை நான் நன்கு தெரிந்தவன். என்னை வெற்றி பெற செய்தால், உங்களை நேரடியாக வந்து சந்தித்தும், எளிமையான முறையில் நீங்கள் குறைகளை சொல்வதற்கு ஏதுவாகவும் நடந்து கொள்வேன். இந்த பகுதி குறைகளை கண்டிப்பாக நிவர்த்தி செய்வேன். ஒரு மாற்றத்துக்காக நீங்கள் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.