மாநில செய்திகள்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் + "||" + LS polls in Vellore likely to be cancelled: Sources

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, 

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  

இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாக , ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. 

இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவை தேர்தல்: வரிசையில் நின்று வாக்களித்தார் முதல் அமைச்சர் பழனிசாமி
சேலம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் அமைச்சர் பழனிசாமி, வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
2. தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வாக்களித்த பின் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
3. தேர்தல் ரத்து; வேலூரில் நாளை 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.
4. 5வது மக்களவை தேர்தல் (1971); இழந்த தொகுதிகளை கைப்பற்றிய இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி
நாட்டில் நடந்த 5வது மக்களவை தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அணி முந்தைய தேர்தலில் இழந்த பல தொகுதிகளை கைப்பற்றியது.
5. வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்றி சாதனை நிகழ்த்த வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.