மாநில செய்திகள்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அண்ணா அறிவாலயம் வருகை + "||" + Andra cm chandrababu Naidu to visit Anna Arivalayam

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அண்ணா அறிவாலயம் வருகை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அண்ணா அறிவாலயம்  வருகை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளார்.
அமராவதி, 

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளார்.   திருவாரூரில் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்துகிறார். 

கடந்த சில தினங்களுக்கு முன் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து மனு அளித்த நிலையில், இன்று திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார். மக்களவை தேர்தலுக்கு பிந்தைய நிலைப்பாடு குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: சந்திரபாபு நாயுடு கடிதம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
2. தேர்தல் அறிக்கைகள் வெளியீடு சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி போட்டி போட்டு வாக்குறுதிகள்
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்காக சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தங்கள் கட்சிகளின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் போட்டி போட்டு வாக்குறுதிகளை அளித்து உள்ளனர்.
3. வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு: சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்
வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.667 கோடி சொத்து : 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் உயர்வு
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.667 கோடி. 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 3 மடங்குக்கு மேலாக பெருகி உள்ளது.
5. விளம்பர படத்தில் காட்சிப்பிழை : கிண்டலுக்கு ஆளான சந்திரபாபு நாயுடு
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வகையான பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளதுடன், தங்களின் சாதனைகளையும் விளம்பரப்படுத்தி வருகின்றன.