மாநில செய்திகள்

எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது- கரூர் கலெக்டர் புகார் + "||" + My life and family are at risk Karur Collector's complaint

எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது- கரூர் கலெக்டர் புகார்

எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது-  கரூர் கலெக்டர் புகார்
கரூர் மாவட்ட திமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கரூர்

 கரூர் கலெக்டர் அன்பழகன் கூறியதாவது:-

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனக்கு மிரட்டல் விடுத்தனர். 

இது குறித்து செந்தில் பாலாஜி, ஜோதிமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, மிரட்டும் தொணியில் பேசினர். இறுதிகட்ட பிரசாரத்திற்காக கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசாரம் செய்ய, செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும், மிரட்டல் விடுத்தும் அனுமதி வாங்கியுள்ளனர். 

அங்கு பிரசாரம் செய்ய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளோம் எனக்கூறி மனு அளித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளோம். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. 1 மணி நேரம் போராட்டம் நடந்த நிலையில், போலீஸ் எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து என்னை மீட்டார். எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. ஜனநாயகத்தில், நேர்மையாக பணி செய்ய விட மறுக்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

கரூர் மாவட்ட திமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை