தேசிய செய்திகள்

கூகுள், ஆப்பிள் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல் + "||" + Indian Govt Asks Google and Apple to Take Down TikTok App Report

கூகுள், ஆப்பிள் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல்

கூகுள், ஆப்பிள் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல்
‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
டிக்-டாக் செயலிக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது மதுரை உயர்நீதிமன்றம், நாட்டில் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். டிக்-டாக் செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16-ந்தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்-டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது, ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை. 

மதுரை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மதுரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என கூறிவிட்டது.

இந்நிலையில் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு   கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்-ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை நீக்குமாறு இரு நிறுவனங்களையும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்படவில்லை. இதேபோன்று, ஆப்பிள் ஆப்-ஸ்டோரிலும் டிக் டாக் செயலி நீக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
2. “பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை” - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜவடேகர் பதில்
பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.
3. மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது - அமைச்சர் கந்தசாமி புகார்
புதுவைக்கு வழங்கும் மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது என்று அமைச்சர் கந்தசாமி புகார் தெரிவித்தார்.
4. கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு
கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ‘கூகுள்’ தேடுதல் தளத்துக்கு வயது 21
கூகுள் நிறுவனம் 1998-ஆம் ஆண்டு இதே நாளில் உருவாக்கப்பட்டது. கூகுள் உருவாக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியுள்ளது.