தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்; டெல்லியில் பரபரப்பு + "||" + With saree stuck in metro train door, woman gets dragged on platform

மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்; டெல்லியில் பரபரப்பு

மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்; டெல்லியில் பரபரப்பு
டெல்லி மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி பெண் ஒருவர் நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியின் இந்தர்லோக் அருகே சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருபவர் கீதா (வயது 40).  இவர் தனது மகளுடன் நவாடா பகுதியில் இருந்து மோதி நகர் நோக்கி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

அவர் ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.  ரெயிலின் கதவு மூடும்பொழுது அவரது சேலை அதில் சிக்கி கொண்டது.  இதனால் அதனை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார்.  ஆனால் அது பலன் தரவில்லை.  இதன்பின் ரெயில் கிளம்பி சென்றுள்ளது.

அவர் சில மீட்டர் தொலைவுக்கு நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டு உள்ளார்.  இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.  பயணிகளில் ஒருவர் அவசரகால பட்டனை அழுத்தி ஓட்டுனருக்கு எச்சரிக்கை அளித்து உள்ளார்.

இதன்பின்னர் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது.  உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  இந்த சம்பவத்தினை அடுத்து ரெயில் சேவை பாதிப்படைந்தது.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவானைக்காவலில் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்து கிடந்ததால் பரபரப்பு
திருவானைக்காவலில் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவு திறந்த கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
2. மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது
சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் மேலும் 3 வழித்தடங்களுக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
3. மும்பையில் மேலும் 2 மெட்ரோ ரெயில் திட்டங்கள் : முதல்-மந்திரி ஒப்புதல்
மும்பையில் மேலும் 2 மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் அளித்து உள்ளார்.
4. மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம்
மெட்ரோ ரெயிலில் 4வது நாளாக நாளையும் இலவச பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
5. மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு இம்மாத இறுதியில் போக்குவரத்து தொடங்கும்
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்க மெட்ரோ ரெயில் பாதையில் பாதுகாப்பு கமிஷனர் நேற்று தன்னுடைய குழுவினருடன் சென்று ஆய்வு பணியை தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.