உலக செய்திகள்

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி + "||" + 23 killed as thunderstorms, dust storm lash Pakistan

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலுக்கு 23 பேர் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு நகரங்களில் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  மழையுடன் புழுதி புயலும் வீசி வருகிறது.  இதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.  பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளன.  இதனால் சாலைகளில் பயணம் செய்வது ஆபத்து நிறைந்த ஒன்றாகி விட்டது.

இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  இதனால் 2 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.  கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோன்று பலுசிஸ்தான் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினை அடுத்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர்.  இங்கு குழந்தை உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள புழுதி புயலில் சிக்கிய 4 மீனவர்களை காணவில்லை.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராசிபுரத்தில் கனமழை, ஆஸ்பத்திரி, வீடுகளில் தண்ணீர் புகுந்தது
ராசிபுரத்தில் கனமழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்தது.
2. உத்தரகாண்டில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு 17 பேர் பலி; அதிகாரிகள் ஆய்வு
உத்தரகாண்டில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.
3. கேரள வெள்ள பாதிப்பு; 91 பேர் உயிரிழப்பு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு 91 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மழை நின்றாலும் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.
5. கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு; 2.87 லட்சம் பேர் பாதிப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வடைந்துள்ளது.