தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் : அறிக்கையை கோரியது மத்திய அரசு + "||" + Centre seeks report on Bdeshi actor allegedly campaigning for TMC

திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் : அறிக்கையை கோரியது மத்திய அரசு

திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் : அறிக்கையை கோரியது மத்திய அரசு
திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையை கோரியுள்ளது.
வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது மற்றும் இந்திய நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கென்கையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது வெளிநாட்டு நடிகர் பிரசாரம் செய்தது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையை கோரியுள்ளது.  விசா நடைமுறைகளை பெர்டோஸ் அகமது மீறியுள்ளாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என கொல்கத்தா வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு (பாரின் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் - எப்ஆர்ஆர்ஓ)  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா -வங்காளதேசம் எல்லையில் ஹெம்தாபாத், காரான்திகாய் பகுதியில் பெர்டோஸ் அகமது பிரசாரம் மேற்கொண்டார் என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசுடன் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் மம்தா பானர்ஜி
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பதில் மம்தா பானர்ஜி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
2. 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் பற்றி மத்திய அரசு ஆய்வு
சுமார் 1,200 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறனை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது.
3. பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு: சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்
பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசை அமைப்பது குறித்து சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
4. திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்த வங்காளதேச நடிகர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
திரிணாமுல் காங்கிரசுக்கு பிரசாரம் செய்த வங்காளதேச நடிகர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
5. மதத்தின் அடிப்படையில் காங்கிரசை சேர்ந்த சித்து பிரசாரம்
பிரதமர் மோடியை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த சித்து பேசியுள்ளார்.