மாநில செய்திகள்

தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி + "||" + Requests to disqualify for DMK candidates dismissed; Chennai High Court order

தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,

ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களான கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், தேர்தல் பிரசாரத்தின்பொழுது, ஆரத்தி எடுக்கும்பொழுது கனிமொழி தரப்பில் பணம் தந்தனர் என புகார் உள்ளது.  இதேபோன்று வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கதிர் ஆனந்திற்கு உரிய பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் சிக்கின என புகார் உள்ளது.

இதனால் அவர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் எம்.எல்.ஏ.விடம் மனு
பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தனர்.
2. அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் மனு
திண்டுக்கல் மாகாளி குளத்தில் அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
3. செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
4. அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கரூர் அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
5. தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தவணை முறை திட்டத்்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.