மாநில செய்திகள்

தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின் + "||" + IT department raided in the DMK candidate in Thoothukudi; MK Stalin

தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.  இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி உள்ளார்.

இந்நிலையில், அவர் தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.  இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தி.மு.க. மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது.  தேர்தலை சீர்குலைக்க பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார் என கூறினார்.  ஆனால், மாவட்ட ஆட்சியரின் தகவலின்பேரில் சோதனை நடத்தப்படுகிறது என வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாக பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோலம் வரைந்து போராடிய பெண்கள் மீதான வழக்கு திரும்ப பெறப்பட வேண்டும்; மு.க. ஸ்டாலின்
கோலம் வரைந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய பெண்கள் மீதான வழக்கு திரும்ப பெறப்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
2. கனமழை எதிரொலி; போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
3. வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. “பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” -மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. வருமானவரித்துறை சோதனையில் பணக்கட்டுக்களை சாலையில் வீசி எறிந்த ஊழியர்கள்
கொல்கத்தாவில் வருமானவரித்துறை சோதனையில் பணக்கட்டுக்களை சாலையில் வீசி எறிந்த ஊழியர்கள்.