கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்கு + "||" + PL cricket competition Rajasthan team a target of 183 runs

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மொகாலி, 

மொகாலியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 32-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது, பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 52 (47) ரன்கள், டேவிட் மில்லர் 40 (27) ரன்கள், கிறிஸ் கெய்ல் 30 (22) ரன்கள் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் மற்றும் இஷ் சோதி, ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.