மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் வருமானவரி சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் + "||" + In Andipatti AMMK Office Income tax raid - Confiscation of money

ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் வருமானவரி சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் வருமானவரி சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் நடந்தி வரும் சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேனி,

ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, பணம் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை அங்கிருந்த சிலர் தடுக்க முயற்சி செய்தனர். இதனால் தற்காப்புக்காக வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இந்நிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை எண்ணும் பணியில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அங்கு கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டிப்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை
ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி எரித்து கொலை செய்யப்பட்டார்.
2. வாக்குப்பதிவு எந்திரங்களை கோவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது - தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கலெக்டரிடம் வலியுறுத்தல்
கோவையில் இருந்து கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கூடாது என்றும் கலெக்டரிடம் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
3. ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்
ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.
4. ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
ஆண்டிப்பட்டியில் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி தெரிவித்துள்ளார்.