தேசிய செய்திகள்

திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபி தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் - கொடி, சுவரொட்டிகள் அழிப்பு + "||" + Thrissur BJP candidate Actor Suresh Gopi election office on attack - Flag, destruction of posters

திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபி தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் - கொடி, சுவரொட்டிகள் அழிப்பு

திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபி தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் - கொடி, சுவரொட்டிகள் அழிப்பு
திருச்சூர் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபியின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் கொடி, சுவரொட்டிகள் போன்றவை அழிக்கப்பட்டது.
திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நடிகர் சுரேஷ்கோபி போட்டியிடுகிறார். இவரது தேர்தல் அலுவலகம் முக்காட்டுகர என்ற இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை அதிகாலை யாரோ சிலர் அந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த கொடிகள், சுவரொட்டிகள் போன்ற தேர்தல் பிரசார பொருட்களையும் அழித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த அலுவலகம் அருகில் சிலர் கும்பலாக செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம் பற்றி மண்ணுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுபற்றி மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகேஷ் கூறும்போது, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தோல்வி பயம் காரணமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். எனவே கூடுதல் மத்திய படைகளை அனுப்பி தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்: பாபர் மசூதி இடிப்பு பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டதால் நடவடிக்கை
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதால் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
2. நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் - பிரசாரத்தில் அய்யப்ப சாமி பெயரை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்தில் அய்யப்ப சாமி பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்த நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.