தேசிய செய்திகள்

மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Madurai Waqf Board College Appointment Issue: CBI Supreme Court directive to inquire

மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு பணி நியமனங்கள் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாகவும், அந்த தொகை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்பு வாரிய தலைவரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா, அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வக்பு வாரிய கல்லூரி நிர்வாகி என்.ஜமால் முகைதீன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து, அவற்றை ‘சீல்’ இடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மதுரையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
2. மதுரையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த இளம்பெண்; அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கொன்றது அம்பலம்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கொன்றது அம்பலமாகி உள்ளது.
3. மதுரையில் மாணவர் விடுதி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது; அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்
மதுரையில் அரசு மாணவர் விடுதி கட்டிடத்தின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. பல மாதங்களாக சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிகாரிகள் மீது மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
4. மதுரையில் டீக்கடைக்காரர் குத்திக்கொலை; குடித்த டீக்கு காசு கேட்டதால் 5 பேர் கும்பல் வெறிச்செயல்
குடித்த டீக்கு காசு கேட்டதால் மதுரையில் டீக்கடைக்காரர் ஒருவர் 5 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
5. மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க முடிவா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க முடிவா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.