தேசிய செய்திகள்

தமிழகத்தில் பணப்பட்டுவாடா: தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் + "||" + Cash Paid in Tamilnadu: Responding to the petition requested to postpone elections - Supreme Court notice to Election Commission

தமிழகத்தில் பணப்பட்டுவாடா: தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

தமிழகத்தில் பணப்பட்டுவாடா: தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக, தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
புதுடெல்லி,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. ரூ.10 ஆயிரம் கோடி வாக்காளர்களுக்கு கொடுக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. இதுதொடர்பாக செய்தியும், உளவுத்துறை தகவலும் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு வங்கி தேர்தல்: வாக்காளர் பட்டியலில் கருணாநிதி பெயர் இடம்பெற்று இருந்ததால் பரபரப்பு
திருவாரூரில் கூட்டுறவு வங்கி தேர்தல் வாக்காளர் பட்டியலில் கருணாநிதியின் பெயர் இடம் பெற்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் அமைச்சர் பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார் .
4. சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாள் வெட்டு; பணம்,செல்போன் பறிப்பு
ராமநாதபுரத்தில் சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாளால் வெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
5. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு 1½ லட்சம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1 லட்சத்து 54 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.