தேசிய செய்திகள்

“தேர்தல் கமிஷனை இழிவுபடுத்த முயற்சி” - முன்னாள் ஐ.ஏ.எஸ்., ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம் + "||" + "Trying to discredit the Election Commission" - Former IAS, military officials letter to the president

“தேர்தல் கமிஷனை இழிவுபடுத்த முயற்சி” - முன்னாள் ஐ.ஏ.எஸ்., ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

“தேர்தல் கமிஷனை இழிவுபடுத்த முயற்சி” - முன்னாள் ஐ.ஏ.எஸ்., ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
தேர்தல் கமிஷனை இழிவுபடுத்த முயற்சி என முன்னாள் ஐ.ஏ.எஸ்., ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
புதுடெல்லி,

முன்னாள் விமானப்படை தளபதி ஆர்.சி.பாஜ்பாய், முன்னாள் தூதர் அசோக் குமார், டெல்லி போலீஸ் முன்னாள் கமிஷனர் ஆர்.எஸ்.குப்தா உள்பட முன்னாள் ஐ.ஏ.எஸ்., ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் என 80 பேர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.


அதில், அவர்கள் கூறி இருப்பதாவது:-

தேர்தல் கமிஷனின் நடுநிலை குறித்து சந்தேகம் எழுப்பி இழிவுபடுத்தும் முயற்சியில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் கமிஷன் மீது அவதூறு பரப்புவதுடன், நேர்மையான தேர்தலை நடத்தும் அதன் திறமை குறித்து சந்தேகம் எழுப்புகின்றன.

நமது தேர்தல் கமிஷன், உலகம் முழுவதும் நம்பகத்தன்மை பெற்றது. இதுபோன்ற ஜனநாயக அமைப்புகளை இழிவுபடுத்த திட்டமிட்ட முயற்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு குறிப்பிட்ட சிந்தனையின்பால் தேர்தல் கமிஷனை கொண்டு செல்ல செல்வாக்கு செலுத்தும் முயற்சியாக இதை பார்க்கிறோம்.

உதாரணமாக, தேர்தல் கமிஷன் மீது சந்தேகம் எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடி சினிமாவை தடை செய்யும் முயற்சியில் இக்குழுக்கள் வெற்றி பெற்றுவிட்டன. முன்னாள் அதிகாரிகள் சிலர் கடிதம் எழுதிய பிறகுதான் இம்முடிவு எடுக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பிரதமர் குறித்து சித்து மீண்டும் சர்ச்சை கருத்து
தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடி குறித்து சித்து மீண்டும் சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.
2. சட்டமன்ற தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா? ஜம்மு காஷ்மீரில் தேர்தல் கமிஷன் ஆய்வு
சட்டமன்ற தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா? என்பது குறித்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் கமிஷன் ஆய்வு நடத்துகிறது.