மாநில செய்திகள்

அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு :ரூ.1.50 கோடி பறிமுதல் + "||" + IT Raid at AMMK office in andipatti

அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு :ரூ.1.50 கோடி பறிமுதல்

அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு :ரூ.1.50 கோடி பறிமுதல்
ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் சோதனை நடத்தினர். விடிய விடிய இந்த சோதனை நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வருமான வரித்துறை சோதனையை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இன்று அதிகாலை 5.30 மணியளவில் வருமான வரித்துறையின் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் இந்த பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பணம் வைத்திருந்ததாக அமமுக மாவட்ட துணைச்செயலாளர் பழனி, கமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல்,  தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருந்த வீட்டிலும் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமொழி வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. 3-ஆம் கட்ட தேர்தல்; 11 மணி நிலவரப்படி 11.61 சதவீத வாக்குகள் பதிவு
பாராளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 11.61 சதவீத வாக்குகள் பதிவாகின.
2. தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவு
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
3. வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை: தேர்தல் ஆணையம்
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி
அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
5. கர்நாடக அமைச்சரின் வீட்டில் சோதனை : வருமான வரித்துறை அதிரடி
கர்நாடக அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.