தேசிய செய்திகள்

பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு + "||" + Police Case Against Navjot Sidhu Over Vote Division Warning To Bihar Muslims

பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு

பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு
பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சர் சித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அமிர்தசரஸ்,

பிகாரின் கடிகார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, பஞ்சாப் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,  “நீங்கள் (முஸ்லிம் மக்கள்) உங்களை சிறுபான்மையினராகக் கருத வேண்டாம். 

இந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நீங்கள் தான் பெரும்பான்மையினர். நீங்கள் சுமார் 64 சதவீதம் உள்ளீர்கள். எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, நரேந்திர மோடியைத் தோற்கடியுங்கள். அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி போன்றவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். அவர்களை பாஜக மறைமுகமாக ஆதரித்து வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.

சித்துவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வாக்களர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சித்துவுக்கு எதிராக போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. 

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது, மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்குப் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால், விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்
பாஜகவுக்கு தவறுதலாக வாக்களித்து விட்டதால், தனது விரலை உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
2. மதத்தின் அடிப்படையில் காங்கிரசை சேர்ந்த சித்து பிரசாரம்
பிரதமர் மோடியை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த சித்து பேசியுள்ளார்.
3. பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி
பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
4. சத்ருகன்சின்கா காங்கிரசில் இணைந்தார்! பாஜக ஒருவரின் கட்சி என விமர்சனம்
பாஜகவில் இருந்து விலகிய சத்ருகன் சின்கா, காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
5. பாஜக தொப்பியை அணிய மறுத்த அமித்ஷா பேத்தி! சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பேத்தி, பாஜக சின்னம் இடம் பெற்ற தொப்பியை அணிய மறுத்து அடம் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகின்றன.