மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Minister Jayakumar oppose Election commission move on the vellore constituency

அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது என்று வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து,  வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தேர்தல் ரத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ”இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது. 

வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கோரியது. ஆனால் தேர்தலை ரத்து செய்துள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க. விரும்புகிறது - அன்புமணி ராமதாஸ்
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க. விரும்புகிறது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
2. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதி ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
3. அதிமுக- பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்புகள் உள்ளன: பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.