தேசிய செய்திகள்

"என்னை உங்களுடைய பிள்ளையாக பாருங்கள்" வயநாட்டில் ராகுல் காந்தி பிரசாரம் + "||" + Consider me your son, best friend Rahul Gandhi at first Wayanad rally

"என்னை உங்களுடைய பிள்ளையாக பாருங்கள்" வயநாட்டில் ராகுல் காந்தி பிரசாரம்

"என்னை உங்களுடைய பிள்ளையாக பாருங்கள்" வயநாட்டில் ராகுல் காந்தி பிரசாரம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அமேதி தொகுதியை அடுத்து இரண்டாவது தொகுதியாக ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களமிறங்கியுள்ளார். வயநாடு தொகுதியில் ஏற்கனவே வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி, இன்று மீண்டும் பிரசாரம் செய்தார். 

ராகுல் காந்தி பேசுகையில், அமேதியை தவிர்த்து இரண்டாவது தொகுதியாக தென்னிந்தியாவில் ஒரு தொகுதியில் போட்டியிட நான் முடிவு செய்த போது என்னுடய நினைவில் வந்தது வயநாடு தொகுதிதான். இந்தியாவின் பிற பகுதிகளைப் போன்று தென்னிந்தியாவும் முக்கியமானது என்ற செய்தியை அனுப்ப விரும்பினேன். உங்களுடைய குரலும் மற்றவர்களைப் போன்று வலுவானது என்றார். 

கேரளாவை அதனுடைய பன்முகத்தன்மைக்காக பாராட்டிய ராகுல் காந்தி, நாட்டில் ஒரே நிகழ்ச்சிநிரலை அமல்படுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டினார். உங்களுடைய பிரச்சினைகளுக்கு நான் உங்களுடன் இருப்பேன். “என்னை உங்களுடைய பிள்ளையாகவும், நண்பராகவும் பாருங்கள்” என  வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார் ராகுல் காந்தி.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2. ராகுல் காந்தியை பாகிஸ்தான் விரும்புகிறது - ஸ்மிருதி இரானி விமர்சனம்
ராகுல் காந்தியை பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது என ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.
3. வயநாட்டில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் அன்பு மிகுதியில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
4. காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி
காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
5. ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பலனளிக்காது: ராகுல்காந்தி காட்டம்
பொருளாதார சீரழிவை சரிசெய்ய தெரியாமல் பிரதமர் தவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவது பலன் தராது என்று ராகுல் காந்தி கூறினார்.