தேசிய செய்திகள்

பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு + "||" + Shoe hurled at BJP leader GVL Rao during media briefing at party headquarters in Delhi

பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு

பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு
பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.
மராட்டிய மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு நடந்ததில் கைது செய்யப்பட்டவர் சாத்வி பிரக்யா தாக்கூர். இவரை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை  2016 மே மாதம் நீக்கியது. ஆனால் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து பிரக்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பிற குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிரக்யாவை போபால் வேட்பாளராக பா.ஜனதா நிறுத்தியுள்ளது. 1989-ல் இருந்து பா.ஜனதாவின் கோட்டையாக இருந்து வரும் போபாலில் களமிறக்கப்பட்டுள்ளார் பிரக்யா.

பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தும் அறிவிப்பை டெல்லி பா.ஜனதா தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் நரசிம்ம ராவ் வெளியிட்டார். அப்போது ஒருவர் நரசிம்ம ராவ் மீது ஷூவை வீசியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஷூ வீசிய நபர் தன்னை ஒரு மருத்துவர் என அடையாளப்படுத்தியுள்ளார். அவரை உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றியுள்ளனர். அவர் ஏன் ஷூவை வீசினார்? என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய கல்வி கொள்கை குறித்து டெல்லியில் ஆலோசனை - மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்பு
தேசிய கல்வி கொள்கை குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதில் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.
2. கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் பேரணி; போக்குவரத்து பாதிப்பு
கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் - மாணிக்ராவ் தாக்கரே சொல்கிறார்
பா.ஜனதா, சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர் என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.
4. பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் - பிரதமர் மோடி பேச்சு
பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
5. புரோ கபடி: டெல்லியை வீழ்த்தியது அரியானா
புரோ கபடி போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.