தேர்தல் செய்திகள்

1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் + "||" + 1 oclockr voting percentage constituency wise

1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்

1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
சென்னை

ஓசூர் அருகே கொரட்டகிரியில் ராட்சத தேனீக்கள் கொட்டியதில் வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்கள் 8 பேர் பலத்த காயம் - வாக்காளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கடலூர் : பண்ருட்டி அருகே திருவதிகையில் வாக்கு இயந்திரத்தில் அமமுக சின்னம் உள்ள பட்டன் உடைந்ததால் வாக்குப்பதிவு 1 மணி நேரமாக நிறுத்தம். மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை: குருங்கல்லூரில் வாக்குச்சாவடியில் விரலில் மை வைக்கும்போது மயங்கி விழுந்து 60 வயது மூதாட்டி மல்லிகா உயிரிழந்தார்.

சென்னை : கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 144 பேர் முதல் முறையாக வாக்களித்தனர்.

1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக  வாக்கு சதவீதம் வருமாறு:-
 
வட சென்னை  37.23%
தென் சென்னை 37.96%
மத்திய சென்னை 36.09%
ஸ்ரீபெரும்புதூர் 39.10%
நெல்லை 39.9 %
கடலூர் 39.18%
பொள்ளாச்சி 40.04%
சேலம் 40.38%
தென்காசி 40%
திருவண்ணாமலை 39.30%
தர்மபுரி 39.88%
விழுப்புரம் 40.35%
கன்னியாகுமரி 37.2%
தூத்துக்குடி 38.99%
காஞ்சிபுரம் 38.48 %
அரக்கோணம் 40.05%
கள்ளக்குறிச்சி 41.07%
தஞ்சாவூர் 39.12%
திண்டுக்கல் 39.32%
மயிலாடுதுறை 38.95%
நீலகிரி 39.31%
சிவகங்கை 39.83%
தேனி 38.72%
ராம்நாதபுரம் 38.99%
பெரம்பலூர் 39.85%
கிருஷ்ணகிரி 39.96%
திருச்சி 40.29%
விருதுநகர் 39.27%
கரூர் 40.63%
திருவள்ளூர் 40.06%
ஆரணி 39.13%
மதுரை 37.4%
கோவை 39.95%
நாகை 40.31%
திருப்பூர் 40.84%
சிதம்பரம் 39.6%
நாமக்கல் 41.56%
ஈரோடு 41.53%

தொடர்புடைய செய்திகள்

1. 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்
2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
2. தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது- தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.
3. பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையில் கருத்து வேறுபாடு: பரபரப்பு தகவல்கள்
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
4. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி
கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.
5. நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி உருக்கம்
நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.