தேசிய செய்திகள்

கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் -ராகுல் காந்தி + "||" + If Congress voted to power, indebted farmers will not be sent to jails Rahul Gandhi

கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் -ராகுல் காந்தி

கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் -ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் தாதாகஞ்ச் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட  ராகுல்  காந்தி, இப்போது கோடிகளில் கடன் வாங்கிய வர்த்தக பிரமுகர்கள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களை சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து நாட்டைவிட்டு பறந்துசெல்ல அனுமதிக்கிறார்கள்.

அதேசமயம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயி கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது நடக்காது. கடனை செலுத்தாத பெரும்புள்ளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கடனை செலுத்தாத ஒரு விவசாயி கூட சிறைக்கு அனுப்பப்படமாட்டார். மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். அதேபோன்று நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.
2. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள்
கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் என்று காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்
பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
4. மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் - ராகுல் காந்தி
பிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது - பிரதமர் மோடி
காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.