தேர்தல் செய்திகள்

“ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா + "||" + "Will Sit By His Side If Rahul Gandhi Becomes Prime Minister": Deve Gowda

“ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா

“ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருப்பேன். மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது போன்ற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை.  தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவித்து விட்டேன்.  ஆனால், சூழ்நிலை நிர்ப்பந்தம் காரணமாகவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். 

 அதேநேரத்தில், நேரடி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை தலைமைச் செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர்.
2. 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்
2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
3. தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது- தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.
4. பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையில் கருத்து வேறுபாடு: பரபரப்பு தகவல்கள்
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
5. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி
கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.