தேசிய செய்திகள்

காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார் + "||" + Priyanka Chaturvedi joins Shiv Sena

காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்

காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்
காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதூர்வேதி, பா.ஜனதாவிற்கு பல்வேறு நிலைகளில் பதிலடியை கொடுத்தவர். 2019 தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தனியாக களமிறங்கியுள்ளது.  காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களும் இப்போது உள்ளே வரத்தொடங்கியுள்ளனர், கட்சியும் அவர்களை ஏற்றுக் கொள்கிறது. பிரியங்கா சதூர்வேதியிடம்  கடந்த ஆண்டு மதுராவில் தவறாக நடந்து கொண்டவரும் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா  சதூர்வேதி கட்சியின் மீதான கோபத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.

 காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக வியர்வையையும், இரத்தத்தையும் கொடுத்தவர்களுக்கு மேலாக குண்டர்களின் குரல் உயரத்தொடங்கியுள்ளது என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது காங்கிரசுக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக பிரியங்கா சதூர்வேதி அறிவித்தார். இதனையடுத்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவில் இணைந்துள்ளார். 

காங்கிரசில் இருந்த போது பிரியங்கா சதூர்வேதி, பா.ஜனதாவிற்கு பல்வேறு விவகாரங்களில் சரியான பதிலடியை கொடுத்தவர் ஆவார். பிரியங்கா சதூர்வேதியை சிவசேனா கட்சியும் வரவேற்றுள்ளது.

 “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்பது முற்றிலும் தவறானது, அதில் உண்மை கிடையாது,” என பிரியங்கா சதூர்வேதி கூறியுள்ளார். 

பிரியங்கா சதூர்வேதியை வரவேற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, “சிவசேனா தொண்டர்களுக்கு நல்ல சகோதரி கிடைத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள்
கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் என்று காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்
பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
3. காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது - பிரதமர் மோடி
காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
4. இன்றைய சூழலில் மூன்றாவது அணி சாத்தியமில்லை என அனைவருக்கும் தெரியும் - தமிழக காங்கிரஸ் தலைவர்
3-வது அணி அமைய வாய்ப்பு இல்லை என சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
5. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் அதிருப்தி: கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் - எடியூரப்பா பரபரப்பு தகவல்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் அதிருப்தியில் உள்ளதால், கர்நாடகத்தில் விரைவில் பா.ஜனதா ஆட்சி அமையும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.