தேர்தல் செய்திகள்

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு... இனி அதிமுகவுக்கு உரிமை கோர மாட்டார்? + "||" + DVV Dinakaran selected as ambassador general He will no longer claim the AIADMK?

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு... இனி அதிமுகவுக்கு உரிமை கோர மாட்டார்?

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு... இனி அதிமுகவுக்கு உரிமை கோர மாட்டார்?
தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.
சென்னை,

அதிமுகவில் ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார்.

அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர்.

அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். எனினும், சுப்ரீம் கோர்ட்  சென்று பரிசுப்பெட்டி சின்னத்தை டிடிவி தினகரன் பொதுச்சின்னமாக பெற்றார்.

இந்நிலையில், அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.

இன்று நடந்து வரும் அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக  டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

எனினும், அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அவர்கள் டிடிவி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.

அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டால், அதிமுக மீது டிடிவி தினகரன் எந்த உரிமையும் கோர முடியாது.

தொடர்புடைய செய்திகள்

1. அமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம்
அமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் செய்துள்ளார்.
2. மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
3. குக்கர் சின்னம் ஒதுக்க கோரி டிடிவி தினகரன் வழக்கு: விசாரணை துவங்கியது
குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.
4. 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் - டிடிவி தினகரன்
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5. மக்களவை தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.