தேசிய செய்திகள்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி + "||" + Modi will be removed, Cong will form govt Rahul Gandhi

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மத்தியில் மோடி ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டுவிட்டு கர்நாடகம் வந்த ராகுல் காந்தி, ராய்சூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக பேசுகிறார். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்களை வேலையில்லாமல் ஆக்குவதால் இந்திய தேசம்  வலிமையடையாது. 2019 தேர்தலில் மத்தியில் மோடி ஆட்சியை நீக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும். 

குஜராத்திலும் மக்கள் மோடியை அகற்றவே விரும்புகிறார்கள். அவர்களின் முடிவை உங்களிடம் நான் தெரிவிக்கிறேன். மோடி நாட்டுக்கு மட்டுமில்லை, குஜராத்திற்கும் எதுவும் செய்யவில்லை என குஜராத் மக்கள் தெரிவிக்கிறார்கள். மோடி பணியாற்றியது எல்லாம் கோடீஸ்வர தொழில் அதிபர்களுக்குதான், எங்களுடைய லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மோடி தொழில் அதிபர்களுக்குதான் கொடுத்தார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவு உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தியின் திடீர் வெளிநாடு பயணம் - காங்கிரஸ் விளக்கம்
ராகுல் காந்தியின் திடீர் வெளிநாடு பயணம் குறித்த சர்ச்சைக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
2. அடக்குமுறை, மதவெறி, வெறுப்பு போன்றவைகளை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி - ராகுல் காந்தி புகழாரம்
அடக்குமுறை, மதவெறி, வெறுப்பு போன்றவைகளை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி என ராகுல் காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.
3. கேரள முதல்-மந்திரியுடன் ராகுல் காந்தி சந்திப்பு: வெள்ள நிவாரணம், இரவு நேர போக்குவரத்து தடை குறித்து விவாதம்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை, ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது வெள்ள நிவாரணம் மற்றும் இரவு நேர போக்குவரத்து தடை குறித்து அவர்கள் விவாதித்தனர்.
4. 'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு ராகுல் காந்தி கண்டனம்
'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...