தேர்தல் செய்திகள்

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது - சத்யபிரதா சாஹூ + "||" + Ariyalur in ponparappi No need for reconsideration Satyabrata Sahoo

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது - சத்யபிரதா சாஹூ

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது - சத்யபிரதா சாஹூ
அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
சென்னை,

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சினை இல்லை. பொதுப்பார்வையாளர்கள் அறிக்கை இன்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் 10 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கும்.  மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுக்கும் அறிக்கையை பொறுத்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கும்.

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது . கடலூர் 1, திருவள்ளூர் 1, தருமபுரி 8 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் குறித்து இன்று மாலை அறிக்கை  வெளியாகலாம்.

தேர்தல் பறக்கும் படையால் தமிழகத்தில் இதுவரை  ரூ.213.18 கோடி , 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் விதிகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை தலைமைச் செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர்.
2. 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்
2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
3. தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது- தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.
4. பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையில் கருத்து வேறுபாடு: பரபரப்பு தகவல்கள்
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
5. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி
கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.