தேசிய செய்திகள்

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் + "||" + Saddened by the loss of lives due to the stampede at a temple in Thuraiyur PM Modi

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் கோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 7 பேர் இறந்தனர். பூசாரியிடம் பிடிக்காசு வாங்க முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.  

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமாக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். சாத்தியமான உதவிகள் அனைத்தும் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. புதிய இந்தியாவில் இந்தியா-ஜப்பான் உறவு மேலும் வலுவடையும் - பிரதமர் மோடி
புதிய இந்தியாவில் இந்தியா - ஜப்பான் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. ஜி-20 மாநாடு: ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் வந்து சேர்ந்தார். வரும் 28-29 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது.
3. 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
‘ஜி-20’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்.
4. ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? என காங்கிரசை பிரதமர் மோடி கேட்டு உள்ளார்.
5. பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்; பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்
பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி கேஜே அல்போன்ஸ் தெரிவித்தார்.