தேசிய செய்திகள்

அடுத்த பிரதமர் பிராந்திய கட்சியிலிருந்துதான் - அகிலேஷ் யாதவ் நம்பிக்கை + "||" + Regional parties will give next PM Akhilesh Yadav

அடுத்த பிரதமர் பிராந்திய கட்சியிலிருந்துதான் - அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

அடுத்த பிரதமர் பிராந்திய கட்சியிலிருந்துதான் - அகிலேஷ் யாதவ் நம்பிக்கை
அடுத்த பிரதமர் பிராந்திய கட்சியிலிருந்துதான் வருவார் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

80 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், நாட்டின் அடுத்த பிரதமரை பிராந்திய கட்சிகள்தான் வழங்கும், காங்கிரஸ், பா.ஜனதாவைவிட மாநிலக் கட்சிகள் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும். நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை, எங்கள் மாநிலத்தில் பிரதமர் வந்தால் மகிழ்ச்சியடைவேன் எனக் கூறியுள்ளார்.

உ.பி.முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் உள்ளார். இப்போது அகிலேஷ் யாதவ் அவர் பிரதமராக ஆதரவை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து அகிலேஷ் யாதவுடன் கெஜ்ரிவால் பேச்சு
தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து அகிலேஷ் யாதவுடன் கெஜ்ரிவால் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
2. டெல்லியில் சோனியா காந்தியை மாயாவதி இன்று சந்திக்கிறார்
டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்திக்கிறார்.
3. அரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டார் மோடி: மாயாவதி கடும் தாக்கு
அரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டார் மோடி என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கடுமையாக சாடினார்.
4. ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறத் தயாரா? மாயாவதிக்கு பிரதமர் மோடி கேள்வி
செயல்திறன் கொண்ட அரசுக்கே மக்கள் வாக்களித்து வருகிறார்கள், எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் என்று பிரதமர் மோடி கணித்துள்ளார்.
5. பிரதமர் மோடி நடத்தை விதிமீற தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது : மாயாவதி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி நடத்தை விதிமீற தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.