உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது + "||" + Parliament to debate Easter explosions

இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது

இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இலங்கையை உலுக்கியுள்ள நிலையில், இன்று அந்நாட்டு பாராளுமன்றம் அவசரமாக கூடுகிறது.
கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 215 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மேலும் 75 பேர் உயிர் இழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 நாட்டை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பற்றி ஆலோசிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்தது.

இந்த சூழலில், இலங்கை பாராளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பாராளுமன்றத்தில் பேச உள்ளனர். நாளை (ஏப்.23) விவாதம் நடைபெறும் என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு - பஸ், ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
2. 39 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை
தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து 39 நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா சலுகையை இலங்கை அரசு ரத்து செய்தது