உலக செய்திகள்

கொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு + "||" + New Bomb Found In Colombo 3 Days After Suicide Attacks

கொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு

கொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு
இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி மூன்று நாட்கள் ஆன நிலையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஞாயிறு அன்று தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 359 பேர் பலியாகினர். இதனையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கொழும்புவில் விமான நிலையம் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில் தாக்குதல் நடந்து மூன்று நாட்கள் ஆன பின்னர் மற்றொரு இடத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஷாப்பிங் மால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராணுவம் அதனை அப்புறப்படுத்தியது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.61 லட்சம் தங்கம் சிக்கியது 4 பேரிடம் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் கொழும்பு, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.61 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது தொடர்பாக 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
2. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. இலங்கை தாக்குதல்; மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் தந்தை, 2 சகோதரர்கள் சுட்டுக் கொலை
இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹசிமின் தந்தை மற்றும் 2 சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ‘வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு’ என எச்சரிக்கை : அதிஉயர் உஷார் நிலையில் கொழும்பு
வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
5. இலங்கை தலைநகர் கொழும்புவில் 9வது குண்டு வெடிப்பு
இலங்கை தலைநகர் கொழும்புவில் 9வது குண்டு வெடிப்பு நடந்துள்ளது.