மாநில செய்திகள்

குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு + "||" + Police investigation to retired nurse for baby sold

குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக தெரிகிறது. குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் குழந்தைகள் இருப்பதை அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அந்த நர்ஸ், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும். குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார். இந்த ஆடியோ பேச்சு ராசிபுரம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து ராசிபுரம் மகளிர் போலீசார், ஓய்வு பெற்ற நர்சிடம் தற்போது அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை வாங்கி, விற்றது உண்மையா? அல்லது தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறீர்களா? என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில், மேற்கூறிய ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை இறுதியில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பச்சிளம் குழந்தையின் உடலை நாய் கவ்வி வந்ததால் பரபரப்பு கடலில் வீசியவர் யார்? போலீஸ் விசாரணை
ஈத்தாமொழி அருகே பச்சிளம் குழந்தையின் உடலை நாய் வாயில் கவ்வி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குழந்தையை கடலில் வீசியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.13 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.13 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கீரிப்பாறை எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி சாவு போலீஸ் விசாரணை
கீரிப்பாறையில் எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.
4. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23¼ லட்சம் மோசடி ஆசிரியை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23¼ லட்சம் மோசடி செய்த ஆசிரியை மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம்
போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம் நடத்தினார்.