தேசிய செய்திகள்

ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது + "||" + Over 73,000 transgenders arrested for extorting money from railway passengers in past 4 years

ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது

ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது
ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரெயிலில் பயணம் செய்யும் போது திருநங்கைகளால் தொல்லைகள் நேரிடுவதாகவும், அவர்கள் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவுகிறது. சில நேரங்களில் பயணிகளிடம் மிகவும் மோசமாக நடப்பதாகவும், பணம் கொடுக்காத நிலையில் தாக்கவும் செய்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து நடவடிக்கையையும், கண்காணிப்பையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ. கோரிக்கைக்கு ரெயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 2015 ஜனவரியில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் கடந்த ஒரு வருடத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரெயில்வேயில் பாதுகாப்பு என்பது மாநிலத்தை சார்ந்தது, குற்றச்செயல்களை தடுப்பது, வழக்குகளை பதிவு செய்தல், அவற்றினை விசாரித்தல் மற்றும் ரெயில்வே வளாகம் மற்றும் இயங்கும் ரெயில்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவை மாநில அரசாங்கங்களின் சட்டப்பூர்வ பொறுப்பு ஆகும், அவை ரெயில்வே போலீஸ் மூலம் மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லக்னோ ரெயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பு; பயணிகள் வருத்தம்
லக்னோ ரெயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடிய திருநங்கைகள்
சென்னையில் திருநங்கைகள் சார்பில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
3. திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
4. மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5. மும்பையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...