மாநில செய்திகள்

3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம்: வெற்றிவேல் + "||" + If 3 MLAs will be disqualified, we won't go court says vetrivel

3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம்: வெற்றிவேல்

3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம்: வெற்றிவேல்
3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்று வெற்றிவேல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் வெற்றிவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “  எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம்; தேர்தலை சந்திப்போம். எங்களது ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் உள்ளனர். சிலர் அமைச்சர்களாக உள்ளனர்” என்றார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக,  அ.தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் நேற்று புகார் மனுவை அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது - ஜவாஹிருல்லா
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
2. அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை; அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை - ராஜன் செல்லப்பா எம்எல்ஏ
அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை; அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.
3. தெலுங்கானாவில் 18 காங். எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி
தெலுங்கானாவில் 18 காங்.எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
4. மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!
நாங்குநேரி எம்.எல்.ஏவாக உள்ள வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.