மாநில செய்திகள்

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் மீட்டர் பொருத்தக்கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + In autos GPS. Match the meter with the tool The Government of Tamil Nadu responded High Court orders

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் மீட்டர் பொருத்தக்கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் மீட்டர் பொருத்தக்கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
‘ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் இணைந்த கட்டண மீட்டரை பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தனியார் அறக்கட்டளை ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் இணைந்த கட்டண மீட்டரை பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின்படி, கடந்த 2014-ம் ஆண்டு சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. எனவே, இந்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். ‘இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகள் பாதுகாப்பில் சிக்கல் இருப்பதாகவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அறநிலையத்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ததை மறுஆய்வு செய்யவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை தமிழக அரசு மறு ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. வன்முறை நடந்த பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த பரிசீலனை தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
வன்முறை நடந்த பொன்பரப்பி வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்துவது குறித்து 21-ந்தேதிக்குள் பரிசீலிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. 16 வயதுக்கு உட்பட்டவரே சிறுமி: போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிசீலனை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
போக்சோ சட்டத்தில் 16 வயதுக்கு உட்பட்டவரே சிறுமி என்றும், அச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. காவலர் குடியிருப்புகளில் சட்ட விரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் போலீஸ் டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளில் சட்ட விரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. விபத்தில் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க சட்ட திருத்தம் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பணியின்போது விபத்து ஏற்பட்டு உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டாலும் அந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க ஏதுவாக உரிய சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.