உலக செய்திகள்

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் -சீனா + "||" + ‘Will be properly resolved’: China on listing Masood Azhar as global terrorist

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் -சீனா

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் -சீனா
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் பெயர் விவகாரம் சரியாக தீர்க்கப்பட வேண்டும் என சீனா கூறி உள்ளது.
பெய்ஜிங்

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை நடத்தி, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஏற்கனவே எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. சீனா முட்டுக்கட்டை போட்டதே இதற்கு காரணம்.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. அதுவும் சீனாவின் முட்டுக்கட்டையால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக இது தொடர்பாக பயன்படுத்தப்படுகிற வாசகங்களில் சில மாற்றங்களை செய்தால், சம்மதிக்கிறோம் என சீனா முன் வந்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக சமரச முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்  நேற்று முன்தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசினர்.

அதற்கு மறுநாள் சீனா ஜெய்ஷ்-இ-முகமது தலைவரான மசூத் அசாரை  ஐ.நா. உலக பயங்கரவாதி என்று குறிப்பிடும் விவகாரம்  "சரியாக தீர்க்கப்பட வேண்டும், ஆனால் அது காலக்கெடுவை வழங்கவில்லை என கூறி உள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் கூறும்போது, நான் உறுதியாக கூறுகிறேன் இது சரியாக தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். 1267 குழுவில் பட்டியல் சிக்கலைப் பற்றி நாம் எமது நிலைப்பாட்டை பல முறை வெளிப்படுத்தியுள்ளோம்.

 நாம் இரண்டு முக்கிய விவரங்களை வலியுறுத்த வேண்டும். ஒன்று 1267 குழுவுக்குள் உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் பட்டியலிடப்பட்டுள்ள பட்டியலை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் இது பெரும்பாலான உறுப்பினர்களின் ஒருமித்த கருத்து என்று நான் நம்புகிறேன்.

 இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட ஆலோசனைகளும் குழுவில் இடம்பெற்றுள்ளன, மேலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளன. மூன்றாவதாக, அனைத்து கட்சிகளின் கூட்டு முயற்சியுடன், இந்த பிரச்சினை சரியாக தீர்க்கப்பட முடியும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மொபைலை பயன்படுத்த முகத்தை ஸ்கேன் செய்வதை கட்டாயமாக்கும் சீனா
சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
2. சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்து 4 பேர் பலி - 8 பேரின் கதி என்ன?
சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகினர். மேலும் 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
3. சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இலங்கையை இந்தியா பாதுகாக்க வேண்டும் -இலங்கை எம்பி வலியுறுத்தல்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இந்தியா பாதுகாக்க வேண்டும் என இலங்கையின் மட்டகளப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
4. சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி - 5 பேர் காயம்
சீனாவின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
5. சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரி - 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு
சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு, 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.