உலக செய்திகள்

முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது + "||" + First drone delivery of a donated kidney ends with successful transplant

முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது

முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது
உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம், உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் (ஆள் இல்லாத விமானம்) சேவையை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்த பெண்மணிக்காக சிறுநீரகத்தை சுமந்து சென்றுள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், இந்த ட்ரோன் சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. "ஹூவாய் தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது"
ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை வலியுறுத்தியுள்ளனர்.
2. அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா? தெளிவுபடுத்தும் ஆய்வு முடிவுகள்
மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட துல்லியமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
3. அடுத்த பிரதமர் என எதிர்பார்க்கப்படுபவர் வீட்டில் இரவில் கலாட்டா : இளம் காதலியுடன் சண்டை
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன் வீட்டில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
4. 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு
கனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
5. புரோட்டோகாலை மீறும் வகையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.