உலக செய்திகள்

லண்டனில் ஐதராபாத் இளைஞர் கத்திக் குத்தில் உயிரிழப்பு : பாகிஸ்தானியர் மீது சந்தேகம் + "||" + Hyderabad man 24 killed in London

லண்டனில் ஐதராபாத் இளைஞர் கத்திக் குத்தில் உயிரிழப்பு : பாகிஸ்தானியர் மீது சந்தேகம்

லண்டனில் ஐதராபாத் இளைஞர் கத்திக் குத்தில் உயிரிழப்பு : பாகிஸ்தானியர் மீது சந்தேகம்
லண்டனில் ஐதராபாத் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
லண்டன் வெல்லிங்டன் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐதராபாத்தை சேர்ந்த முகமது நதிமுதீன் (வயது 24) பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. உடனடியாக அவருடைய மனைவி சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு அழைப்பு விடுத்து தகவல் கூறியுள்ளார். அப்போது பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் முகமது நதிமுதீனை தேடினர். அவர் பார்க்கிங் ஏரியாவில் சடலமாக காணப்பட்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இச்சம்பவம் முகமது நதிமுதீன் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர் அதே சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய பாகிஸ்தானியர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை தொடர்கிறது. இதற்கிடையே தேவையான உதவியை வெளியுறவுத்துறை வழங்க வேண்டும் என அவருடைய குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.  முகமது நதிமுதீன் 2012-ம் ஆண்டு லண்டன் சென்று அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்களை அழைத்து சென்றுள்ளார். இப்போது இங்கிலாந்து குடியுரிமையை பெற விண்ணப்பம் செய்துள்ளார். 

அவருடைய மனைவி அப்ஷா மற்றும் ஒரு மகள் ஆகியோர் 25 நாட்களுக்கு முன்னதாகத்தான் லண்டனுக்கு சென்றுள்ளனர். இப்போது அவர் கர்ப்பமாக உள்ளார், விதிகளின்படி அவர் இந்தியாவிற்கு திரும்ப முடியாது. எனவே, முகமது நதிமுதீன் இறுதிச்சடங்கு லண்டனிலே நடைபெறும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.