தேசிய செய்திகள்

பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது - காங்கிரஸ் + "||" + Modi govt compromised national security by reducing Rafale jets Cong

பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது - காங்கிரஸ்

பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது - காங்கிரஸ்
பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பா.ஜனதா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காங்கிரஸ் அரசு 126 விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், பா.ஜனதா அரசு அதனை 36 விமானங்களாக குறைத்தது. விமானங்களை வாங்குவதில் ஊழல் என குற்றம்சாட்டும் காங்கிரஸ், எண்ணிக்கையை குறைத்ததையும் விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில் நிதிநிலை காரணமாகத்தான் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். 

மத்திய அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு விமானங்கள் வாங்கும் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது என தெரிவித்தார் நிதின் கட்காரி. இந்நிலையில் உண்மையான நிலை வெளியாகியுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது. பா.ஜனதா அரசு ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தேச பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “முடிவில், உண்மை வெளியாகிவிட்டது! போலி தேசியவாத மோடி அரசால் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. பணத்தை சேமிப்பதற்காக ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 126-ல் இருந்து 36 ஆக குறைக்கப்படவில்லை.  இந்திய விமானப்படை மற்றும் நாட்டினரின் பாதுகாப்பு புறந்தள்ளப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? - காங்கிரஸ் கேள்வி
2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? என மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
2. "நேரு குடும்பத்தை சேராதவர் காங். தலைவராக இருக்கலாம்" - மணிசங்கர் அய்யர் பரபரப்பு பேட்டி
நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்று மணிசங்கர் அய்யர் கூறினார்.
3. ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதி - மாயாவதி குற்றச்சாட்டு
ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
4. திருச்சியில் தனது செல்வாக்கால் வெற்றி ; திருநாவுக்கரசர் கூறியது தான் திமுகவில் அதிருப்தி - கராத்தே தியாகராஜன்
திருச்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் கூறியது திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியது என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.
5. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற பயந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்கிறது; காங்கிரஸ் அரசு மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துவிடும் என்று பயந்துபோய் மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...