தேசிய செய்திகள்

மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து + "||" + Priyanka Gandhi visit to Himachal Pradesh was canceled due to poor weather

மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து

மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து
மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டது.
சிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தில் கடைசி கட்ட நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாண்டி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆஷ்ரே சர்மாவை ஆதரித்து சுந்தர்நகர் பகுதியில் அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இதேபோல் சிம்லா நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிலை ஆதரித்து தியோங் என்ற இடத்திலும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய இருந்தார்.

ஆனால் மோசமான தட்பவெப்ப நிலையால் தரம்சாலா அருகே உள்ள ககல் விமான நிலையத்தில் பிரியங்கா காந்தி யின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாததால் தன்னை காண பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்களிடம் பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் அவர் சுந்தர்நகர் பகுதிக்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்வார் என தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார்; பிரியங்கா காந்தி
அரசுக்கு எதிராக உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார் என பிரியங்கா காந்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
2. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா தான் பொருத்தமானவர்: பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர்சிங்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா தான் பொருத்தமானவர் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர்சிங் கூறினார்.
3. உ.பி.மாநிலம் நாராயண்பூரில் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா - கைது
உ.பி.மாநிலம் நாராயண்பூரில் பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.
4. மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் -பிரியங்கா
மக்களவைத் தேர்தலில் கட்சிக்காக உண்மையாக உழைக்காதவர்களை விரைவில் கண்டுபிடிப்பேன் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
5. ராகுல் காந்தியை சமாதானம் செய்ய பிரியங்கா காந்தி தீவிர முயற்சி
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் பிரியங்கா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...