தேசிய செய்திகள்

நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு + "||" + Jammu-Srinagar highway closed after fresh landslides, thousands stranded

நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு

நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட  நிலச்சரிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறியதாவது:- “ ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன.

தகவலின்பேரில் நிலச்சரிவினால் சாலையில் கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடையும் வரையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனம் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது.

ஏற்கெனவே நிலச்சரிவின் காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை கடந்த 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மூடப்பட்டது. பின்னர் அந்த சாலையில் சிக்கியிருந்த வாகனங்கள் மட்டும் வெளியேற வசதியாக, ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது” இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் பலாத்காரம்: ஸ்ரீநகரில் முழு அடைப்பு
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஸ்ரீநகரில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
2. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை கைது செய்தது என்.ஐ.ஏ
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
4. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பொதுபோக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு: எதிர்க்கட்சிகள் போராட்டம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பொதுபோக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
5. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு: உமர் அப்துல்லா விமர்சனம்
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதை உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.