தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையே வார்த்தை மோதல் + "||" + After Violence In Kolkata, Mamata Banerjee-BJP War Of Words: 10 Facts

கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையே வார்த்தை மோதல்

கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையே வார்த்தை மோதல்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையே வார்த்தை மோதல் முற்றியுள்ளது.
கொல்கத்தா, 

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்றுகொண்டிருந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பா.ஜனதா தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீவைத்தனர். விடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது.

இதுபற்றி அமித்ஷா கூறும்போது, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். ஆனாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விவேகானந்தர் இல்லத்துக்கு செல்ல நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கடுமையாக சாடினார். 


தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் - உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை
ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் என்று உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் - பாஜக
தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறி உள்ளார்.
3. பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்... வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்...
பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்...
4. கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் -சி.பி.ராதாகிருஷ்ணன்
கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் என பாரதீய ஜனதா முன்னாள் அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார்.
5. டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை: பாஜக வலியுறுத்தல்
டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...