உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக போர்: எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு + "||" + Iran accuses US of escalating tensions as Russia decries 'downward spiral'

ஈரானுக்கு எதிராக போர்: எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு

ஈரானுக்கு எதிராக போர்: எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை அமெரிக்கா மறுப்பு
ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக வெளியான தகவலை டிரம்ப் மறுத்துள்ளார்.
வாஷிங்டன்

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பதற்றம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் படைகளைக் குவித்து, மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க திட்டமிடுவதாக ஈரான் குற்றம்சாட்டி இருந்தது. 

உலகில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஆதாரமாக உள்ள ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போர் தொடுக்கவும் ஏதுவாக மத்திய கிழக்கு பகுதிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படையை  அங்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது. 

ஆனால் இதனை அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘‘இது போலி செய்தி. இதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை. சரியானதைத்தான் நான் செய்வேன். எந்த ஒரு நாட்டையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இது உண்மை என்றால் எங்கள் திட்டமும் வேறுவிதமாக இருக்கலாம்’’ என்றார்.

ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், ஈரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்து கொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்: ஹூவாய் நிறுவனம்
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு
அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.
4. அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி
அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.
5. அமெரிக்காவில் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்
திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்