தேசிய செய்திகள்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Monsoon to be delayed by five days; to hit Kerala on June 6

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 ஆம் தேதி துவங்கும். நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருவதால், தென்மேற்கு பருவ மழையை ஆவலோடு மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜூன் 6 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். அந்தமான் கடல்பகுதிகளின் தெற்குப் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகள், அதை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது. 

இப்பகுதிகளில் மே 18, 19 ஆகிய தினங்களில் தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனியார் வானிலை ஆய்வு அமைப்பான ஸ்கைமேட், கேரள கடற்கரை பகுதிகளில் ஜூன் 4 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று கணித்து இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் கனமழை
சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
2. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. ஸ்பெயின் நாட்டில் வெள்ளம் - 5 பேர் பலி
ஸ்பெயின் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.
4. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
5. கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.