தேசிய செய்திகள்

கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசே காரணம் : அமித்ஷா + "||" + TMC behind violence in Kolkata, not BJP, says Shah

கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசே காரணம் : அமித்ஷா

கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசே காரணம் : அமித்ஷா
கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்று கொண்டிருந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பா.ஜனதா தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீவைத்தனர். 

விடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது. இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கடுமையாக சாடினார். 

இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம், பாஜக அல்ல என்று தெரிவித்தார். அமித்ஷா மேலும் கூறுகையில், “ பாஜக அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. ஆனால், எங்கும் வன்முறை இல்லை. ஆனால், மேற்கு வங்காளத்தில் மட்டும் வன்முறை நடைபெற்றுள்ளது. அனுதாபம் பெறுவதற்காக தத்துவ மேதை வித்யாசாகர் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களே சேதப்படுத்தியுள்ளனர். 

சி.ஆர்.பி.எப் வீரர்கள் இல்லையென்றால், நான் காயமின்றி தப்பியிருக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் அமைதி காத்து வருகிறது. குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்படவில்லை. தேர்தல் கமிஷன் இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்கிறது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா
உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
2. “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை
ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. அமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் - எல்லை பாதுகாப்பு படை விமானி ராஜினாமா
அமித்ஷா விமானத்தை இயக்க ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, எல்லை பாதுகாப்பு படை விமானி ஒருவர் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளார்.
4. வளர்ச்சிக்கான பயணம் தொடக்கம்; வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்த அமித்ஷா பேச்சு
புதுடெல்லியில் இருந்து கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைத்துள்ளார்.
5. மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும்: அமித்ஷா
மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும் என்று பாஜக தேசியத்தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...